Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வயோமித்ரா'' என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:44 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் உலவி வருகிறது.
 

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்த சாதனையை நிகழ்த்திய   நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.. 

இந்த நிலையில்  வெற்றிகரமாக இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைந்ததை அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1என்ற விண்கலம் விரைவில் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  விண்வெளிக்கு பெண் ரோபோவை அனுப்ப   இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சுகன்யான் திட்டத்தின்  2 வது சோதனையில் வயோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் முதல் சோதனை வரும் அக்டோபர் மாதம் 2 வது வாரத்திற்குள் நடைபெறும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதிலும் இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments