Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சாமியாருக்கு பரோல் கொடுத்தே எம்.எல்.ஏவானா ‘ஜெயிலர்’? - ஹரியானா தேர்தலில் சந்தேகம்!

Prasanth Karthick
புதன், 9 அக்டோபர் 2024 (09:28 IST)

பாலியல் குற்றவாளி சாமியாருக்கு அதிகமுறை பரோல் கொடுத்த ஜெயிலர், ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளது அரசியல்ரீதியாக விமர்சனங்களை சந்தித்துள்ளது.

 

 

தேரா சச்சா சவ்தா என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் சாமியார் ராம் ரஹீம் சிங் ஜீ இன்சான் என்பவர். இவர் தனது ஆசிரமத்தில் இருந்த பெண் துறவிகள் இருவரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர் அவ்வபோது பல காரணங்களை சொல்லி பரோலில் வெளியே வந்த வண்ணம் உள்ளார்.

 

கடந்த 4 ஆண்டுகளில் 259 நாட்கள் அவர் பரோலில் வெளியேதான் இருந்துள்ளார். அவருக்கு அதிகமான பரோல்களுக்கு பரிந்துரைத்தது அந்த சிறையின் ஜெயிலர் சுனில் சங்வான். இந்நிலையில் சமீபத்தில் ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜெயிலர் பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.
 

ALSO READ: நெருங்கும் தீபாவளி; சூடுபிடிக்காத ஜவுளி வியாபாரம்! - காத்து வாங்கும் ஈரோடு ஜவுளிச் சந்தை!
 

பாஜகவில் இணைந்ததுமே அவருக்கு ஹரியானாவின் சார்கி தாத்ரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகுதியில் 1957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார் சுனில் சங்வான்.

 

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் 21 நாட்கள் பரோலில் வந்திருந்த சாமியார் ராம் ரஹீம், சமீபத்தில் ஹரியானா தேர்தலை ஒட்டி மீண்டும் 20 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வெளியே இருந்தார். இதனால் சுனில் சங்வானின் வெற்றிக்கு பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம் உதவினாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெருங்கும் தீபாவளி; சூடுபிடிக்காத ஜவுளி வியாபாரம்! - காத்து வாங்கும் ஈரோடு ஜவுளிச் சந்தை!

எக்கச்சக்கமாய் எகிறிய தக்காளி விலை! பண்ணை பசுமை கடைகளில் விலை குறைவு! - தமிழக அரசு நடவடிக்கை!

நீர் மற்றும் வேளாண் நிலைத்தன்மை மையம் சர்வதேச மாநாடு!

தொல் திருமாவளவன்  நடத்திய மாநாடு ஒரு போலி மது ஒழிப்பு மாநாடு- பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்....

அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுதந்திரத்தை நாங்கள் வரவேற்கிறோம் - தளவாய் சுந்தரத்திற்கு அழைப்பு விடுத்த எச். ராஜா!

அடுத்த கட்டுரையில்