Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மேக் இன் இந்தியாவா? பிரேக் இன் இந்தியாவா?’ - பிருந்தா காரத் கேள்வி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:20 IST)
மேக் இன் இந்தியாவா? பிரேக் இன் இந்தியாவா? பிருந்தா காரத் கேள்வி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் இடித்துரைத்தார்.
 

 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிருந்தா காரத் கூறுகையில், ”பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மதப்பகைமைக் கருத்துகளை யார் பேசினாலும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.
 
தாத்ரி படுகொலை பற்றி அவர்ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே! அது நடந்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். அங்கேயிருந்தே இதைக் கண்டித்திருக்க முடியாதா? அமெரிக்காவில் இதுபோல் நடந்திருந்தால் ஒபாமா கண்டித்திருக்க மாட்டாரா?
 
வெளிநாடுகளுக்குச் செல்கிற பிரதமர் அங்கே உள்ள நிறுவனங்களுக்கு “மேக் இன் இந்தியா” என்று கூறி அழைப்பு விடுக்கிறார். ஆனால் இங்கே இருப்பவர்கள் மறு மதமாற்றம் முதல் மாட்டுக்கறி அரசியல் வரையில் “பிரேக் இன் இந்தியா” (இந்தியாவை பிளவுபடுத்துதல்) பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments