வீட்டுகாவலில் வைக்கப்பட்டாரா டெல்லி முதல்வர்? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:49 IST)
டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு கொடுத்துள்ளதால் தான் டெல்லியில் இந்த அளவிற்கு விவசாயிகள் உள்ளே வர முடிந்தது என்ற குற்றச்சாட்டும் மத்திய அரசு தரப்பில் இருந்து வருகிறது
 
இந்த நிலையில் திடீரென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஒரு மாநில முதல்வரை மத்திய அரசு வீட்டுக்காவலில் வைக்க முடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா? என்ற கேள்வியையும் அரசியல் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டெல்லியிலும் அதேபோன்று வைக்கப்பட்டுள்ளது என்பது பெரும் கேள்வியாக உள்ளது
 
ஆனால் டெல்லி முதல்வர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவலை மத்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments