Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் கேரளா: பிரணாப் புகழாரம்

நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் கேரளா: பிரணாப் புகழாரம்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (03:15 IST)
நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா திகழ்வதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புகழாராம் சூட்டினார்.


 
 
கேரளாவில் தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா உள்ளிட்டமுக்கிய பல  துறைகளுக்கான 5 திட்ட தொடக்க விழா கோழிக்கோடு அருகே சைபர் பார்க் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், இந்திய ஜனாதிபதி முகர்ஜி கலந்து கொண்டு  திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் கேரள அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, கிராம பஞ்சாயத்துகளுக்கும் கூட, அதிவேக பிராட்பேண்ட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எல்லாத்துறைளையும் இணைத்து 600க்கும் மேற்பட்ட இணைய நிர்வாக செயலிகளையும் கேரளா அரசு பயன்படுத்தி வருகிறது. இதனால் தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமையை  பெற்றுள்ளது என்று பாராட்டினார்.
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments