ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் கைது தடை நீட்டிப்பு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:03 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
 
இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியும், அதேபோல் அவரை ஏப்ரல் 16 ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். 
அந்த காலக்கெடுவானது இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments