Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா வன்கொடுமை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (11:09 IST)
மருத்துவ மாணவி நிர்பயா,  வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை  உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டு உதவிக்காக மன்றாடி 45 நிமிடங்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
தீவிர சிகிச்சை மேற்கொண்ட அப்பெண் 10 நாட்கள் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிர்பயா 3 நாட்களில் பரிதாபமாக பலியானார்.
இந்த வழக்கில் காவல் துறை 6  குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களில் ராம்சிங் என்பவன் கடந்த 2014 மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டான்.
 
அவர்களில் ஒருவன் 17 வயது என்பதால் அவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. மீதமுள்ள முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா மற்றும் அக்ஷய் தாகுர் ஆகியவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இன்னொரு குற்றவாளியான அக்ஷய் தாகுர் மேல் முறையீடு செய்யவில்லை.
 
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அளிக்க உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்த அயோக்கியன்களை நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்