Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையதளத்தில் ஆபாசபடத்தை உலாவ விட்ட இளைஞர் கைது - முக்கியப்புள்ளிக்களுக்கு சிபிஐ வலை

இணையதளத்தில் ஆபாசபடத்தை உலாவ விட்ட இளைஞர் கைது -  முக்கியப்புள்ளிக்களுக்கு சிபிஐ வலை
, வெள்ளி, 15 மே 2015 (17:56 IST)
இணையதளத்தில் ஆபாச படங்கள் உலாவர காரணமாக இருந்த பெங்களூருரைச் சேர்ந்த கெளசிக் என்ற இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
 
இந்த ஆண்டு துவக்கத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சிபிஐ அதிரடியாக களத்தில் குதித்தது.
 
இந்நிலையில், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, இணையதளத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ய ஒரு பெரிய கும்பல் செயல்படுவது சிபிஐயின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
 
இதன் அடிப்படையில், ஒடிசாவைச் பூர்விமாக கொண்ட பெங்களூருவில் வசிக்கும் கௌசிக் குனோர் என்ற டாக்சி நிறுவன ஊழியரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 
 
அவரிடம் இருந்து, படத்தொகுப்பு செய்யும் கருவிகள், கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவைகளையும்,  500 க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
 
கைது செய்பட்ட கெளசிக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்பு அவரை 4 நாள் காவலில் விசாரணைக்கு எடுத்தனர். அவரை டெல்லிக்கும், சித்தாப்பூருக்கும் அழைத்துச் சென்றும் விசாரணை நடத்த உள்ளனர்.
 
இதேபோல், சமீபத்தில், ஒடிசாவில் இணையதளத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த கும்பலில் உள்ள முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
 
இதனால், ஆபாசபடங்களை இணையத்தில் வெளியிட்ட நபர்கள் பலர் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil