Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக உள்ள நாடு இந்தியா: சராசரி வேக பட்டியலில் 115 ஆவது இடம்

இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக உள்ள நாடு இந்தியா: சராசரி வேக பட்டியலில் 115 ஆவது இடம்
, வெள்ளி, 25 மார்ச் 2016 (10:48 IST)
ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக உள்ள நாடாக இந்திய உள்ளது. சராசரி வேகத்தில் இந்தியா 115 ஆவது இடத்தில் உள்ளது.


 

 
அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.
 
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.
 
இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் "Fourth Quarter, 2015, State of the Internet Report" வெளியாகியுள்ளது.
 
உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது.
 
குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது.
 
மிகக்குறைந்த  சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன.  சராசரி வேகத்தில் இந்தியா 115 ஆவது இடத்தில் உள்ளது.
 
மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின்  14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil