Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத மோதல்கள் அதிகரித்துள்ளது’ - மத சுதந்திர ஆணையம் அறிக்கை

Webdunia
வெள்ளி, 1 மே 2015 (11:31 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத மோதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க அரசின் கீழ் இயங்கிவரும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம், சமீபத்தில் இந்தியாவில் நிலவிவரும் மத சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துள்ளதாக விமர்சித்துள்ளது.
 
மேலும், அந்த அறிக்கையில், ‘‘இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, சிறுபான்மையின மதத்தவர்களை பாஜகவை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளால் பல வன்முறை தாக்குதல்களும், கட்டாய மதமாற்றமும் நடந்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த கருத்தினை இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை இந்தியாவை பற்றியும், நமது அரசியல் சாசனம் பற்றி குறைந்த அளவே புரிந்து கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்ற அறிக்கைகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments