Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ரொமிலா தாப்பர்

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2014 (18:05 IST)
இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என்று ரொமிலா தாப்பர் கூறியுள்ளார்.
 
இது குறித்து டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் ரொமிலா தாப்பர் கலந்து கொண்டு பேசியதாவது: 
"முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது கூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை மறைத்துக் கொள்ள சம்மதிக்கின்றனர்.
 
பகுத்தறிவு அறிவுலகின் பாரம்பரியம்:
 
பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர்கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். தற்போது இந்துத்துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத்தனை பேரும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர். பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும். இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
 



அறிஞர்கள் கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்:
 
இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சியாகி விடுகின்றனர்.
 
மதச்சார்பற்ற கோட்பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடைசெய்யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன. மத மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சுவதால்தான் சிறு எதிர்வினையைகூட செய்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர்.
 
சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படும்போது போர் புரிய வேண்டும்:
 
மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக்களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படுகிறது. அறிஞர்கள் இத்தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறிவுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments