Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த தினம்..

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (16:25 IST)
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் புகழ்மிக்க முன்னாள் பிரதமர் நேருவுக்கும் கமலாவுக்கும் மகளாகப் பிறந்தார் இந்திரா காந்தி.
உலகில் உள்ள  மிகச் சிறந்த கல்விக்கூடங்களில்  குறிப்பாக ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திரா கல்வி கற்றார்.
 
அவரது சேவையை பாராட்டி பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
சிறு வயதில் தந்தையைப்போல இந்திராவும் தேசிய விடுதலைப் போரட்டத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவால் சர்க்கா சங்கத்தை துவங்கினார். 
 
மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் படி 1947 ஆம் ஆண்டுல் தேசப் பிரிவிணைவாத கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
 
1942 ஆம் ஆண்டு பெரோஸ் காந்தியை மணந்தார்.  இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒருவர்  ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி .
ராஜீவ் காந்தி பாரதப் பிரதமராக இருந்த போது,1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவர்  ஸ்ரீ பெரும்புதூரில் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வந்தார் . அன்று இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தனு என்ற மனிதவெடிகுண்டால் கொல்லப்பட்டார்.இன்று தமிழத்தில் 7 பேர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்,நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்) விடுதலைக்காக  பலரும் போராடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
 
1980ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி சஞ்சய் காந்தி ஒரு விமான விபத்தில் பயணம் செய்த போது மரணம் அடைந்தார்.அப்போது அவ்ர் வயது 33. அரசியல் வியூகத்தில், வல்லவர். மட்டுமல்லாமல் தன் இந்திராவிற்கு வலது கரமாக திகழ்ந்தவர். திறமையான விமான ஓட்டியான இவர் விபத்து நடந்த போது இவரே விமானத்தை இயக்கிச் சென்றது குறிப்பிடத்தக்து.
 
1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக செயலாற்றினார்.
 
மேலும் 1956-ல்  அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பெண்கள் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்1959 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் பணியாற்றினார்.  1978 ல் இப்பதவியப் பெற்றார்.
பின் 1977 ஆம் ஆண்டில் பிரதமர் பதிவியை ஏற்றார்.
 
இந்தியாவின் இரும்பு பெண்மணியான இவர் பிரதமராக பதவி வகித்தபோது நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977)கொண்டு வரப்பட்டது. எராளமான அரசியல் கட்சி தலைவர்கள் சிறையில் அப்போது  அடைக்கப்பட்டனர்.
பின்பு அவர் தன் பதிவிகாலத்தில் தன் சீக்கிய பாதுகாவலர்களால் ஆப்பரேஷன் பூளூஸ்டார்என்ற பெயரால் பொற்கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதன் பலிவாங்கலாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.
 
இவரது படுகொலைக்கு உலகமே கண்ணீர் வடித்தது என்பது வரலாறு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments