தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:29 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை குறைந்திருந்த நிலையில் டிக்கெட் விலையில் இண்டிகோ நிறுவனம் சலுகை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான சேவைகள் தொடர்ந்து பாதித்து வருவதால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் விமான பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான நிறுவனங்கள் பல சலுகைகளையும் அவ்வபோது அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இண்டிகோ நிறுவனம், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்கள் விமானத்தில் பயணித்தால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதுடன், பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களுக்கு எப்படி வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும்?" ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி

தாய்லாந்து ராணுவத் தாக்குதல்: கம்போடியாவில் புத்தமத துறவிகள் உள்பட 29 பேர் காயம்

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சாராயம் விற்ற பணத்தில் தான் முப்பெரும் விழா நடைபெற்றது.. திமுக குறித்த அண்ணாமலை விமர்சனம்..!

விஜய் கூட்டத்தில் பொது சொத்து சேதப்படுத்தப்பட்டால் நீதிமன்றம் தலையிடும்.. தவெகவுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments