Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய பெண்கள் அழகானவர்கள், கடுமையாக உழைக்கக்கூடியவர்கள் - சீன அதிபரின் மனைவி

இந்திய பெண்கள் அழகானவர்கள், கடுமையாக உழைக்கக்கூடியவர்கள் - சீன அதிபரின் மனைவி
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (16:33 IST)
டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்ற சீன அதிபரின் மனைவி, இந்திய பெண்கள் அழகானவர்கள், வலிமையானவர்கள், கடுமையாக உழைக்கக்கூடியவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.  
 
இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள சீன அதிபர் ஜீ ஜிங்பிங் தனது மனைவி பெங் லியோன்னையும் உடன் அழைத்துவந்துள்ளார்.
 
சீனாவின் முதல் பெண்மணியான பெங் லியோன் டெல்லியில் உள்ள தாகூர் சர்வதேச பள்ளிக்கு சென்றபோது  அங்கு அவரை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வரவேற்றார். 
 
அதன்பின் மாணவர்களைச் சந்தித்த பெங் லியோன், இந்திய பெண்கள் அழகானவர்கள் வலிமையானவர்கள், கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். 
 
நாம் நமது லட்சியங்களை அடைய கடுமையாக உழைப்பதும்,  நிறைய விஷயங்களை கற்றுகொள்வதும் முக்கியமாகும் எனத் தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil