Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: கொரோனா பரவல் காரணமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (07:07 IST)
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் ஒரு ரூபாய் 5 காசுகள் சரிந்து உள்ளது என்பதும் தற்போதைய ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 47 காசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா பரவல் அதிகரிப்பு, பல மாநிலங்களில் கட்டுப்பாடு விதிப்பு ஆகியவைதான் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். நேற்றைய வணிக நேரத்தில் 73 ரூபாய் 42 காசுகளாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வணிகம் நேர முடிவில் 74 ரூபாய் 47 காசுகள் ஆக இருந்தது. இதனால் பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வங்கிகளின் வட்டி விகிதம் பற்றிய கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் நேற்று வெளியிட்டார். அந்த வெளியீட்டில் ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு வட்டி ரிசர்வ் வங்கியில் இருப்பு வைத்துள்ள தொகைக்கான வட்டி விகிதம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments