Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் ரயில்கள் ரத்து! – அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (14:20 IST)
இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் இந்த மாதம் முழுவதும் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த சுய ஊரடங்கை நாளை காலை வரை நீட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் மார்ச் 31 வரை நிறுத்துவதாக ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பஸ்ட், சிறப்பு ரயில்கள் என அனைத்து ரயில்களும் இந்த மாத இறுதி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் பலர் பேருந்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments