Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு போகாதீங்க!? – இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (09:56 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உருமாற்றமடைந்த பிஎஃப்7 வேரியண்டுகளும் கண்டறியப்பட்டு வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதில் மக்கள் திருமணம், அரசியல் நிகழ்வுகள் சமூக கூட்டங்களில் தேவையின்றி கூட வேண்டாம் என்றும், சர்வதேச நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கிய-தமிழக வெற்றிக்கழகம்!

ஆறு மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கொடிகளை 195 முட்டைகளில் வரைந்து இந்தியா உலக சாதனை

படகு போக்குவரத்து மற்றும் தீம் பார்க் ஆய்வு- தமிழ்நாடு சுற்றுலா துறை.

இடிந்து விழுந்த புதிய மேம்பாலம்..! தரமற்ற முறையில் கட்டியதாக புகார்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments