Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எச்சரிக்கை: இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (09:12 IST)
கொரோனா வைரஸ் பரவுதலை கருத்தில் கொண்டு படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 16 மாவட்டங்களில் ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளை நிறுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படங்கள், வெப் சீரியல்கள், டிவி சீரியல்கள் என அனைத்தும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து தயாரிப்பாளர்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments