Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் கட்டப்பட்ட பாலம்.. இந்திய ராணுவம் சாதனை..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (06:40 IST)
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டிய சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் என்றும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கு பாதை இல்லாததால் இந்திய ராணுவம் 20 டன் எடை கொண்ட பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் 90 டன் எடையுள்ள எடையை தாங்கக்கூடியது என்றும் இந்த பெய்லி பாலத்தினை மூன்றே நாட்களில் கன மழையிலும் போராடி கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

190 அடி நீளம் உள்ள இந்த பெய்லி பாலத்தை கட்டும் பணியை நேற்று மாலை இந்திய ராணுவம் முடித்த நிலையில் இந்த பாலத்தின் வழியாக மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணியை செய்து வருகின்றனர். 350 பேர் கொண்ட இந்திய ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்காக இந்த பாலத்தை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காதவர் முதலமைச்சர் வேட்பாளரா? விஜய் குறித்து திருமாவளவன்..!

டி.டி.எஃப். வாசன் வங்கி கணக்கு திடீர் முடக்கம்: என்ன காரணம்?

கொடைக்கானலையும் விட்டு வைக்காத வெயில்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

மத்திய, மாநில அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி போராட்டம்! விஜய்யின் அடுத்த ப்ளான்!?

அடுத்த கட்டுரையில்
Show comments