Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் 1,000 கோடி சொத்துக்களை முடக்க தயாராகும் இந்தியா

இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் 1,000 கோடி சொத்துக்களை முடக்க தயாராகும் இந்தியா
, புதன், 14 அக்டோபர் 2015 (16:42 IST)
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உள்ளது இந்தியா.
 

 
கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம். இதனால், இந்தியா தாவூத் இப்ராஹிமை தேடி வருகிறது.
 
மேலும், பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களை இந்திய உளவுத்துறை பாகிஸ்தானுக்கு வழங்கி, தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.
 
இந்நிலையில் இங்கிலாந்தில் தாவூத்துக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். தாவூதின் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
 
வரும் நவம்பர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து செல்லும்போது இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச உள்ளார்.
 
தாவூத் இப்ராஹிமிற்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, மொராக்கோ, ஸ்பெயின், அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ் மற்றும் துருக்கியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil