Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைக்கு மேலும் ராணுவத் தளவாடங்கள் வழங்க இந்தியா திட்டம்

இலங்கைக்கு மேலும் ராணுவத் தளவாடங்கள் வழங்க இந்தியா திட்டம்
, புதன், 22 அக்டோபர் 2014 (16:30 IST)
இலங்கை இராணுவத்திற்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுதத் தளவாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
இலங்கையுடனும் மாலைதீவுடனும் பாதுகாப்பு உறவுகளை இந்தியா மேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும், இரு நாட்டு இராணுவங்களுக்கும் பயிற்சியையும் ஆயுத தளவாடங்களையும் வழங்கி அவற்றின் திறனை மேலும் அதிகரிப்பதற்கு உதவப்போவதாகவும் இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 




 
இலங்கை பாதுகாப்புச் செயலளர் கோத்தபய ராஜபக்சவுடன் திங்கட்கிழமை (20.10.2014)  இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி இருதரப்பு பதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட அதேவேளையில், செவ்வாய் கிழமை மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகமத் நிஜாமுடனும் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, இந்தியா இலங்கைக்கு இரண்டு கடலோர கண்காணிப்பு படகுகளையும் ஆயுத தளவாடங்களையும் வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா 24 எல்-70 துப்பாக்கிகள், இராடார்கள், நிலக்கண்ணி வெடியிலிருந்து பாதுகாப்பளிக்ககூடிய வாகனங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் 800 முதல் 900 இலங்கை படையினருக்கு பயிற்சியையும் வழங்கி வருகின்றது. இதே போன்று மாலத்தீவிற்கு ஹெலிகாப்டர்களையும் ஏனைய தளவாடங்களையும் வழங்கி வருகின்றது.

சமீப காலங்களில் சீனாவுடன் இந்த இரு நாடுகளும் தமது உறவை பலப்படுத்தியுள்ளதும், அதன் புதிய கடலோர பட்டுப்பாதை திட்டத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil