Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் மீது ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடத்திய இந்தியா: ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்றால் என்ன?

பாகிஸ்தான் மீது ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடத்திய இந்தியா: ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்றால் என்ன?
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (11:08 IST)
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா விமானப்படை செயல் பட்டது. 

 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தியது. ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்பது ஒரு நாடு மற்றொரு நாடுடன் போர் தொடுப்பது என்பதல்ல. ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’, ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். 
 
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, மற்ற நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் தான் ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’. இதில், தீவிரவாதிகளை கொல்வது மட்டுமே நோக்கமாக இருக்கும். மற்றபடி, சுற்றுப்புறப் பகுதியை அழிப்பதோ, கட்டிடங்கள், பொதுமக்களின் கட்டமைப்புகளை தகர்ப்பதோ இலக்காக  இருக்காது.
 
இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் சிறிய படை, பெரிய அளவில் திட்டங்கள், இலக்குகள் எதுமின்றி, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, தீவிரவாதிகளை அழித்துவிட்டு வர வேண்டும். அதை நமது ராணுவத்தினர் வெற்றிகரமாக நடத்தி உள்ளனர். 

தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ பஃப்பரிங் பிரச்சனையை சரி செய்வது எப்படி?