Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிநவீன வசதிகளுடன் 6 நீர்மூழ்கி கப்பல்கள்! – மத்திய அரசு ஒப்புதல்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (13:43 IST)
இந்திய கடற்படைக்கு அதிநவீன வசதிகளோடு கூடிய 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் ராணுவத்தின் முப்படைகளிலும் சமீப காலத்தில் நவீனமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவுக்கென சொந்தமாக நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பதற்கான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ரஷ்யாவிடமிருந்து 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கப்பட்ட ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கி கப்பல் கடல் எல்லைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

அதன் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அது பின்தங்கிய மாடல் என்பதால் குத்தகை நீட்டிக்கப்படாமல் மீண்டும் ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கென நவீன வசதிகளுடன் கூடிய 3 நீர்மூழ்கி கப்பல்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.43 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட உள்ள நிலையில் மராட்டியத்தை சேர்ந்த மசகன் டக் மற்றும் எல் & டி என்ற தனியார் கட்டுமான நிறுவனங்கள், 5 வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் பணியை துவக்கும் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments