‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

Siva
புதன், 7 மே 2025 (07:22 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியதாகவும், ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை 1.44 மணிக்கு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 3 பேர் உயிரிழந்து 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்துள்ளார்.
 
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம்! பாஜக பிடியில் சிக்கி விட்டார்! - சீமான் கருத்து!

ஒருவழியாக வெளியே வந்த விஜய்! திமுகவை கண்டித்து முதல் அறிக்கை!

மீண்டும் தொடங்கும் தவெக பிரச்சாரம்? அடுத்த வாரம் அவசர பொதுக்குழு!? - விஜய் திட்டம் என்ன?

கரையை நோக்கி வரும் மோன்தா புயல்! வேகம் குறைந்தது! - கரையை கடப்பது எப்போது?

தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments