Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய ராணுவம்: பாக். தீவிரவாத முகாம்கள் கூண்டோடு காலி!

எல்லையில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய ராணுவம்: பாக். தீவிரவாத முகாம்கள் கூண்டோடு காலி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:51 IST)
காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாமில் கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நடப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.


 
 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் நாடுகள் மாநாட்டையும் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக பூட்டான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணித்தது.
 
இந்நிலையில் உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை
இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங் உறுதிபடுத்தினார்.
 
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவலை அனுமதிக்க முடியாது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
இந்திய எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது என்று ஜெனரல் ரன்பீர் சிங் கூறினார்.
 
இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் கூண்டோடு அழிந்ததாக ராணுவம் கூறியுள்ளது. மேலும் 20 தீவிரவாத முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments