Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியில் இருந்து இனி மார்பிள்ஸ் வாங்க மாட்டோம்: ராஜஸ்தான் வியாபாரிகள் உறுதி..!

Siva
புதன், 14 மே 2025 (08:51 IST)
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட துருக்கியிடம் இனிமேல் மார்பிள்ஸ் வாங்க மாட்டோம் என, ராஜஸ்தான் மாநில மார்பிள்ஸ் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே புனேவில் உள்ள வியாபாரிகள், இனிமேல் துருக்கியில் இருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறியதில், கிட்டத்தட்ட ரூ.1,500 கோடி நஷ்டம் துருக்கிக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், துருக்கியில் இருந்து ஆண்டுதோறும் 14 முதல் 16 லட்சம் டன் வரை இந்தியாவுக்கு மார்பிள்ஸ் இறக்குமதி செய்யப்படும் சூழலில், இனிமேல் துருக்கியுடன் எந்த விதமான மார்பிள்ஸ் வணிகத்தையும் தொடர மாட்டோம் என ராஜஸ்தான் மாநில மார்பிள்ஸ் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதன் காரணமாக, துருக்கி நாட்டிற்கும், அங்குள்ள மார்பிள்ஸ் வணிகர்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

34 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகுமா? என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

ரஃபேல் விமானம் தாக்கியதாக வரும் செய்தி கட்டுக்கதை: இந்திய ராணுவம் விளக்கம்..!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அதிருப்தி..!

நான் தான் போரை நிறுத்தினேன்.. மீண்டும் அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments