Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள்..! – இந்தியா படைக்கும் புதிய சாதனை!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (09:51 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டவுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதுடன் மெகா முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகமான தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களின் தரவரிசையில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 கோடி கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வரை இந்தியா முழுவதும் 99,12,82,283 தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை கணக்கிட்டால் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட வீதம் 100 கோடியை தாண்டியுள்ளது. 9 மாதங்களுக்குள் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

சார்பதிவாளர்-அலுவலக உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாக்கண்ணு..! எதற்காக தெரியுமா.?

வீசும் வெப்ப அலை.! இனி கோடையில் தேர்தல் வேண்டாம்..! தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments