Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு! – 14 ஆயிரத்தை நெருங்கிய இந்தியா!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (08:24 IST)
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 1.076 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரம், டெல்லி, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதன்மையில் உள்ள மகாராஷ்டிரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments