Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (07:25 IST)
நேற்று அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கியது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்தியை அடுத்து, மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. 
 
ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அதிரடியாக ஈரான் மீது அமெரிக்கா எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் தெரிவித்து வரும் நிலையில், நேற்று ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியிருந்தார். 
 
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரகசியம் காப்பதற்காக பி2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் பரவின. 
 
இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய வான்வெளியை பி2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தவில்லை என்று உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments