Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

Siva
ஞாயிறு, 4 மே 2025 (14:39 IST)
ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நதிகள் வறண்டு இருக்கும் சூழ்நிலையில், தற்போது ஜம்முவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணை மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுவே மோடியின் இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும், இதனால் பாகிஸ்தான் பாலைவனமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டன, பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டது, இந்தியா–பாகிஸ்தான் தபால் சேவை நிறுத்தப்பட்டது, இந்திய வான்வெளி பாகிஸ்தான் விமானங்களுக்கு மூடப்பட்டது, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், ஜம்முவில் உள்ள பக்லிஹார் என்ற அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், அதுவும் தற்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் பாகிஸ்தான் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் என்றும், பாகிஸ்தான் மீள வாய்ப்பே இல்லை என்றும், மோடி அடுத்தடுத்து கொடுக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்கள் காரணமாக பாகிஸ்தான் நிலைகுலைந்து  வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments