Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா – இந்தியா பேச்சுவார்த்தை: இருதரப்பு படைகள் வாபஸ்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (12:10 IST)
சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு படைகளும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லடாக்கின் இந்திய – சீன எல்லையில் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள மேம்பாட்டு பணிகளால் சீன ரானுவத்துடன் சில வாரங்களுக்கு முன்னதாக மோதல் எழுந்தது. இதனால் எல்லையில் இருநாட்டு படைகளும், ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதட்டம் எழுந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லைப்பகுதியிலிருந்து கணிசமான வீரர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன. ஆனால் பக்காங் சோ, தவுலத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ துருப்புகள் திரும்ப பெறப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments