Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியா கூட்டணியில் கருத்துவேறுபாடு..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:23 IST)
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சியின் தலைவர்கள் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக இந்த தீர்ப்பை எதிர்த்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் போட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்ப்பை எதிர்த்தும்  சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தீர்ப்பை வரவேற்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்தியா கூட்டணியில் சில கட்சிகள் தொடருமா அல்லது இந்தியா கூட்டணி முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments