Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேஸ் சிலிண்டருக்கு இனி பில் தொகையை மட்டும் கொடுத்தால் போதும் : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

கேஸ் சிலிண்டருக்கு இனி பில் தொகையை மட்டும் கொடுத்தால் போதும் : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
, வியாழன், 24 செப்டம்பர் 2015 (07:59 IST)
கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது இனி பில் தொகையை மட்டும் கொடுத்தால் போதும் என்று இந்தியன் ஆயில் நிருவனம் அறிவித்துள்ளது.


 

 
பொதுவாக, கேஸ் சிலிண்டர் நமது வீட்டில் டெலிவரி செய்பவர்கள் ரூ.40 முதல் ரூ.60 வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதில் தரைத்தளம் என்றால ஒரு ரேட். மேல் வீடு என்றால் ஒரு ரேட். கொடுக்கவில்லை என்றால் அடுத்த முறை நமக்கு சரியான நேரத்தில் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வராது. எனவே நாமும் எதற்கு வம்பு என்று கூடுதல் கட்டணத்தை கொடுத்து விடுகிறோம். கொடுத்து கொடுத்து நாளைடைவில் அதுவே ஒரு பழக்கமாகவும், இப்பொது வழக்கமாகவும் மாறிவிட்டது.
 
இது சென்னையில் மட்டுமில்லை. தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் இப்படித்தான். இப்போது அது பற்றி பல்வேறு தரப்பினர்களிடமிருந்து, குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் புகார் எழுந்ததுள்ளது. 
 
சமீபத்தில், இதுபற்றி செய்தித்தாள்களில் ‘சென்னையில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய ரூ.60 வரை கூடுதல் கட்டணம் வசூல், இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க இல்லத்தரசிகள் கோரிக்கை’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சரியான நடவடிக்கையை இப்போது எடுத்துள்ளது. இதுபற்றி, இந்தியன் ஆயில் நிறுவன தலைமை தகவல் தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
"சமையல் கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வரும்போது, அதை கொண்டு வருபவர்கள் கையில் இருக்கும் ‘பில்’லில் என்ன கட்டனம் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த மட்டும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கொடுத்தால் போதும். அப்படி வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வருபவர்கள் யாராவது ‘பில்’ கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்டால், 1800-2333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், அனைத்து சமையல் கியாஸ் வினியோகஸ்தரர்களிடமும், சிலிண்டர் டெலிவரி செய்யபவர்களிடமும் ‘பில்’ தொகையில் இருக்கும் தொகையை விட கூடுதல் கட்டணத்தை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
 
இனி இண்டேன் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது யாரேனும் பணம் கேட்டால் மேலே உள்ள தொலைபேசி எண்ணிற்கு போன் செய்யுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil