Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (16:15 IST)
அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாதல் காரணமாக மனச்சோர்வு, கவலை, மற்றும் குற்ற உணர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தேவையற்ற செலவுகள் நிதி நெருக்கடியையும் உருவாக்கும்.
 
தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு, கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்குங்கள், முடிந்தவரை கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவது உடல் இயக்கத்திற்கு உதவும். பொருட்களை உடனடியாக வாங்காமல், சில நாட்கள் கழித்து தேவைதானா என யோசித்து வாங்குங்கள்.  தேவையில்லாத விளம்பரங்களை தவிர்ப்பதன் மூலம், ஆன்லைன் ஷாப்பிங் ஆசையை குறைக்கலாம். இவ்வாறு அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments