Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,303 மரண தண்டனை தீர்ப்புகள்

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,303 மரண தண்டனை தீர்ப்புகள்
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (13:17 IST)
கடந்த பத்தாண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் 1303 மரண தண்டனை தீர்ப்புகளை அளித்துள்ளன என தேசிய குற்றப்பதிவு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக, புது தில்லியில் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவு அமைப்பின் சிறை அறிக்கையில், ”கடந்த 2004இல் இருந்து 2013 வரை 10 ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் 1303 மரண தண்டனை தீர்ப்புகளை அளித்துள்ளன.
 
ஆனால் 4 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தனஞ்செய் சட்டர்ஜி, மகாராஷ்டிராவில் முகம்மது அஜ்மல் கசாப் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மற்றும் தில்லியில் திகார் சிறையில் முகம்மது அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இவர்களுடன் சமீபத்தில் யாகூப் மேமனும் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
 
சமீபத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மேற்கொண்ட மரண தண்டனை ஆய்வு அறிக்கை, மரண தண்டனை பெற்றவர்களில் 60 பேர் முஸ்லிம்கள் ஆவர் என்று கூறுகிறது. இருப்பினும் இதுவும் முழுமையான அறிக்கை அல்ல; ஏனெனில் பல மாநிலங்கள் மரண தண்டனை குறித்து தகவல்கள் தர மறுத்துவிட்டன.
 
கடந்த 1967இல் வெளியிடப்பட்ட 35ஆவது சட்ட ஆணையத்தின் அறிக்கை 1953இல் இருந்து 1963 வரை 1400 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் தூக்கிலிடப்பட்டவர்களில் மத வாரியாக தகவல்கள் இல்லை. அதிகபட்சமாக கடந்த 2007இல் தான் 186 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil