விவேகானந்தரின் மறு உருவம் மோடி: சொன்ன தமிழக எம்பி யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (20:29 IST)
பிரதமர் மோடியை ஒரு தமிழக எம்பி புகழ்கிறார் என்றால் அவர் யாரென்று கண்ணை மூடிக்கொண்டு ரவீந்திரநாத் குமார் என்று சொல்லி விடலாம். ஏனெனில் தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பாஜக கூட்டணி எம்பி அவர் மட்டுமே
 
இன்று மக்களவையில் தனது உரையில் ரவீந்திரநாத் குமார் கூறியபோது, 'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதமர் மோடியை விவேகானந்தரின் மறு உருவமாக பார்க்கின்றேன்' என்று கூறினார்.
 
மேலும் தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும், பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ரவீந்திரநாத் குமார் தனது உரையில் தெரிவித்தார்.
 
மேலும் அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், தொழில் உற்பத்தி துறையில் நாட்டிலேயே சிறப்பான இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments