Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

Siva
வெள்ளி, 2 மே 2025 (19:08 IST)
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மாபெரும் தலைவர்களாக, மன்னர்களாக உருவாகினர், ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என  பிரசாந்த் கிஷோர் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
 
பீகாரில் நடந்த கூட்டத்தில், ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: என் பெயர் பிரசாந்த் கிஷோர். நான் அரசியல் தலைவரல்ல. நான் சாதாரண குடும்பத்தின் மகன். என் தாத்தா பீகாரில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சாதாரண தொழிலாளி. என் தந்தை அரசு டாக்டராக இருந்தவர்.
 
கடந்த பத்தாண்டுகளில் நான் யாருக்கெல்லாம் ஆலோசனை கூறினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர்.  ஆனால் 10 ஆண்டுகளாக அதை செய்த பிறகு, 3 ஆண்டுக்கு முன் அந்த வேலையில் இருந்து வெளியில் வந்து விட்டேன்.
 
நான் மாபெரும் தலைவர்களை உருவாக்கினேன். பெரிய கட்சிகளை வெற்றி பெறச் செய்தேன். ஆனால் அவை எல்லாம், மக்கள் வாழ்க்கையை மாற்றவில்லை.அதனால் தான் நான் அந்த வேலையில் இருந்து வெளியே வந்தேன்.
 
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மன்னர்களாக ஆகும்படியான அறிவையும் சக்தியையும் கடவுள் எனக்கு அளித்திருக்கும்போது, நான் அத்தகைய ஆலோசனையை பீகார் மக்களுக்கும் வழங்க விரும்பினேன். நான் உங்கள் கையை பிடித்து உங்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்..!

வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? வடநாட்டில் நடந்ததா? - நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலனை! - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments