Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உயிரைக் கொடுக்க தயார்...நாட்டை பிரிக்க விட மாட்டேன்- முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (18:22 IST)
எனது  உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் இந்திய நாட்டை பிரிக்கவிட மாட்டேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி  ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்த பானர்ஜி, உங்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.  இந்த ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்.  உங்களுக்கு  யாரும் தீங்கு செய்ய முடியாது.  நாம் ஒன்றாக  போராடி வெற்றிபெறுவோம், நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்று கூறினார்.

மேலும், ‘’நாட்டில் சிலர் பிரிவினையை  உண்டாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், வங்காளத்தில் அமைதி தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு மோதல்கள் தேவையில்லை …அமைதியே வேண்டும்.   நாட்டில் பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு இந்த ரம்ஜான் நாளில் நான் கூறுகிறேன்… என் வாழ்க்கையைத் தரத் தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments