Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வக்கீல் குடும்பம்: வேலியே பயிரை மேய்ந்த கதை!

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வக்கீல் குடும்பம்: வேலியே பயிரை மேய்ந்த கதை!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:54 IST)
ஹைதராபாத்தில் 14 வயது மைனர் பெண்ணை சட்டம் படித்த வக்கீல் மற்றும் அவரது மகனும் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதனால் கர்ப்பமடைந்துள்ள அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 
 
ஹைதராபாத்தின் கிரீன் ஹில்ஸ் காலனியில் உள்ள வக்கீல் சுதாகர் ரெட்டியின்(60) வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு 14 வயது பெண் வேலை செய்துவந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்த அந்த பெண்ணை வக்கீல் சுதாகர் ரெட்டியும் அவரது மகன் பரத் குமார் ரெட்டியும் பலமுறை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனால் கர்ப்பமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கைது செய்ய தேடுவதால் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். இது குறித்து கூறிய அந்த பெண் நான் வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் இருவரும் என்னை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். நான் இதை தடுக்கும் போது அவரது குடும்பமே சேர்ந்து என்னை தாக்குவது வழக்கம்.
 
வெளியில் இந்த விவகாரத்தை சொல்லக்கூடாது எனவும், தினமும் வேலைக்கு வரவேண்டும் எனவும் மிரட்டி வைத்திருந்தனர் என தெரிவித்தார். மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சட்டம் தெரிந்த வக்கீல் மீது பிரிவு 376-ன் கீழ் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்