Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச இணையதளத்தில் மனைவியின் தொலைபேசி எண் : பழிவாங்கிய கணவன்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (15:39 IST)
மனைவியை பழிவாங்குவதற்காக ஆபாச இணையதளத்தில் அவரின் தொலைபேசி எண்னை பதிவு செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஏராளமான தொலைபேசி எண்களிலிருந்து, செக்ஸ் உறவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
விசாரணையை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், ஆபாச இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து, அந்த பெண்ணின் தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
 
அதன் மூலம், அந்த இடத்தின் முகவரியை கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், புகார் கொடுத்த அந்த பெண்ணின் முகவரியும், அந்த முகவரியும் ஒன்றாக இருந்தது.
 
எனவே நேராக அவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது, அந்த பெண்ணின் கணவரின் லேப்டாப்பிலிருந்துதான், ஆபாச இணையதளத்தில் அவரின் எண் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
 
விசாரணையில், தன்னுடைய மனைவி தன்னிடம் அடிக்கடி சண்டை போடுவதால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், அவரை பழிவாங்குவதற்காக இந்த செயலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்