Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும் - மோகன் பகவத் பேச்சு

Webdunia
வியாழன், 3 ஜூலை 2014 (13:58 IST)
ஆணின் தேவையை நிறை வேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
 
இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இன்று பெண்கள் அதிகம் கல்விகற்க ஆரம்பித்துவிட்டனர். திருமணத்தின்போது கணவன்-மனைவி இருவரின் கல்வியும் சரிசமமாக இருந்து விடுகிறது. சில வேலைகளில் கணவனை விட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்கு பிறகு படித்து பட்டம் பெற்றுவிடுகிறாள். சிலர் கணவனை விட உயர் பதவிக்கு சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கிவிட்டது.
 
இந்த இடத்தில் கணவனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றிவிடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது என மோகன் பகவத் கூறினார்.
 
ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும்  பெண் கல்வியையும், பெண்ணின் சுதந்திரத்தையும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதாவது மனைவி, கணவனுக்கு சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும்.
 
பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கிவிடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ராக்ட்) மாத்திரமே என்று தன்னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாக கொள்ள வேண்டும்.
 
வீட்டை கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தரவேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும். என்று கூறினார்.
 
பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை; இந்தியாவில்தான் கற்பழிப்பு நடந்துள்ளதாக முன்பு ஒருமுறை பேசி கடும் விமர்சனத்துக்குள்ளானவர் தான் இந்த மோகன் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments