குடிப்பதை தடுத்த மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:51 IST)
வீட்டில் குடிப்பதை மனைவி தடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் உயிருடன் பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிருடன் எரித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முஜாரியா என்ற பகுதியில் மதுவுக்கு அடிமையான முனீஸ் என்பவர் தினசரி வீட்டிற்கு குடிபோதையுடன் வந்ததாகவும் சில சமயம் வீட்டில் மது குடித்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் அவரது மனைவி ஷானோ வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் வீட்டில் வைத்து குடிக்க வேண்டாம் என்று கணவரை என்ற கண்டித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் குடிபோதையில் ஆத்திரம் அடைந்த கணவர் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்து விட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஷானோ உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான கணவர் முனீஸ் என்பவரை தேடி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் குடிக்க வேண்டாம் என்று கண்டித்ததற்காக மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய கணவர் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments