Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் கொரோனாவை தாண்டிய வெள்ளம்! – 100க்கும் மேல் பலி!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (09:57 IST)
அசாமில் தென்மேற்கு பருவக்காற்றால் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசாம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அசாமில் கொரோனாவை விட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது மழை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் அசாம், பீகார் மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமின் நதிக்கரயோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் மழையினால் அசாமில் 108 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபக்கம் கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்பிலிருந்தே மீளாத சூழலில் மழை வெள்ளம் மேலும் அசாமில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments