Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 வருடங்கள் வாழ வேண்டுமா? - பாபா ராம் தேவ் தரும் ஆலோசனை

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (16:28 IST)
மனித உடல் 400  வருடங்கள் வாழும் தன்மை உடையது எனவும், அந்த இலக்கை அடைய முடியாமல் போவதற்கு நாமே காரணம் எனவும் யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் டெல்லியில் நடந்த 12வது தேசிய தர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகா குரு பாபா ராம் தேவ் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது பற்றி பல ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
 
நமது உடல் 400 ஆண்டுகள் வாழும் தன்மை உடையது. ஆனால், உணவு மற்றும் நமது வாழ்க்கை முறை ஆகியற்றின் மூலம் உடல்களை சித்திரவதை செய்வதால் நோய்கள் ஏற்பட்டு சீக்கிரமாகவே நாம் மரணமடைந்து விடுகிறோம். 
 
நமது தவறான உணவு பழக்க வழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பிற நோய்கள் ஏற்பட்டு நமது ஆயுள் குறைகிறது. மீதமுள்ள காலங்களை மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை நம்பி ஓட்டுகிறோம்.
 
ஆரோக்கியமான உணவு மற்றும் உடல்பயிற்சி மூலம் நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். 6 மணி நேர தூக்கம், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய மூலம் நாம் ஆயுளை அதிகரிக்கலாம்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments