Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தபால் தலையில் உங்கள் புகைப்படம் இடம்பெற வேண்டுமா?

Advertiesment
தபால் தலையில் உங்கள் புகைப்படம் இடம்பெற வேண்டுமா?
, வியாழன், 30 ஜூன் 2016 (18:09 IST)
தபால் தலையில் உங்கள் புகைபடத்தை இடம்பெறச் செய்யும் சேவையை குறைந்த கட்டணத்தில் இந்திய தபால் துறை விரிவுபடுத்தியுள்ளது.

 


 
2011ஆம் ஆண்டு உலக தபால் தலை கண்காட்சியில் பொது மக்களின் விருப்பமான புகைப்படத்தை தபால் தலையில் இடம் பெறச் செய்யும் சேவை துவங்கப்பட்டது. அப்போது அந்த சேவை நாடு முழுவதும் பரவலாக தொடங்கவில்லை.
 
ஆனால் தற்போது நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட முக்கிய தபால் நிலையங்களில் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ‘மை ஸ்டாம்ப்’ என்று அழைக்கப்படும் இந்த சேவை உங்கள் புகைப்படம் மட்டுமின்றி, உங்களுக்கு விருப்பமானோர் புகைப்படத்தையும் இடம்பெறச் செய்யலாம்.
 
சொந்த புகைப்படத்தை தபால் தலையில் இடம்பெறச் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேவையை தனிநபர் மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களும் பெறலாம். 
 
தனிநபரின் புகைப்படம் இடம்பெறச் செய்ய 12 தபால் தலைகள் கொண்ட ஒரு ஷீட்டிற்கு ரூ:300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்: தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்