Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.டி.ஆர் மகன் மரணம் ; இப்படித்தான் விபத்து ஏற்பட்டது : போலீசார் விளக்கம்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:35 IST)
என்.டி.ஆரின் மகன் சீல் பெல்ட் அணியாததாலும், வேகமாக காரை ஓட்டியதாலுமே விபத்து ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

 
என்.டி.ஆரின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று காலை ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். 
 
ஹரிகிருஷ்ணா ஓட்டியது டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சுனர் கார் ஆகும்.  இந்த காரில் 150 கி.மீ. வேகத்தில் ஹரிகிருஷ்ணா ஓட்டியுள்ளார். அப்போது, தண்ணீர் பாட்டிலை அவர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது முன்னால் ஒரு வளைவு இருக்கவே, அவர் காரை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், வேகமாக சென்றதால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.

 
கார் குலுங்கியதால் கதவுகள் திறக்கப்பட்டு அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். சீட் பெல்ட் அணிந்திருந்தால் அவர் காயங்களுடன் தப்பித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் அணியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.
 
காரில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்