Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணத்தின் இடுப்பு எலும்பை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற மருத்துவமனை ஊழியர்: (வீடியோ இணைப்பு)

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (12:25 IST)
ஒடிஷாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சடலத்தை தூக்கிச் செல்ல வசதியாக அதன் இடுப்பு பகுதியில் மிதித்து இரண்டாக ஒடித்து மடித்து எடுத்துச் சென்ற கொடூரம் அறங்கேறியுள்ளது.


 
 
ஒடிஷாவில் மருத்துவமனை நிர்வாகம் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யாததால் தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஒடிஷா மாநிலம் பலசூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோரோ நகரை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற விதவை பெண் கடந்த புதன்கிழமை ரயில் மோதியதில் பலியானார். சோரோவில் மருத்துவமனை இல்லாததால் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
 
பலசூருக்கு ஆட்டோவில் உடலை எடுத்துச் சென்றால் செலவாகும் என பாரிக்கின் இடுப்பில் ஏறி நின்று உடலை இரண்டாக ஒடித்து மடித்த சுகாதார மைய ஊழியர் ஒருவர், அதன் பிறகு இரண்டு ஊழியர்களாக சேர்ந்து பாரிக்கின் உடலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, துணியால் மூட்டை கட்டி இரண்டு கம்புகளில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர். 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாரிக்கின் மகன் ரபிந்திர பாரிக் செய்வது அறியாது கதறி அழுதார். இது குறித்து அறிந்த ஒடிஷா மாநில மனித உரிமை ஆணையம் போலீசார் மற்றும் பலசூர் மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரி உள்ளது.
 
நன்றி: NDTV

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments