Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மானிடம் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் 10 பேரால் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (10:11 IST)
இந்தி நடிகர் சல்மான் கானிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு 10 பேரால் பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

 
சல்மான்கான் ‘சுல்தான்’ என்ற இந்திப் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு இணையதளம் அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தது. 
 
அப்போது சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர் கேட்டார்.
 
அதற்கு சல்மான்கான் கூறும்போது “படப்பிடிப்பின் போது, ஒவ்வொரு நாட்களும் சண்டை காட்சிகள் ஆறு மணி நேரம் எடுக்கப்பட்டது. அப்போது 120 கிலோ எடை கொண்ட எதிரியை நான் அலேக்காக தூக்கி கீழே எறிய வேண்டும். அதுவும் பலமுறை, வெவ்வேறு திசைகளில் தூக்கி போட வேண்டும். 
 
படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது என்னால் நேராக நடக்க கூட முடியாது. ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போல் என் உடம்பு ரணமாக இருக்கும். அதன்பின் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதை நிறுத்தவும் முடியாது” என்று கூறியிருந்தார். 
 
அவரின் இந்த கருத்துக்கு பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்களை கேலி செய்யும் விதமாக, சல்மான்கான் கூறியிருப்பதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.
 
இவ்விவகாரத்தில் சல்மான்கான் 7 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையமோ, சல்மான்கான் ஜூன் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள், ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் சல்மான்கான் இதுவரை மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில், பலாத்காரத்துக்கு உள்ளான தனக்கு சல்மான்கானின் கருத்து மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணாக தான் உணர்ந்ததாக சல்மான்கான் கூறியிருந்தார். இதற்காக அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்