Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடிக்கு நம்பர் ப்ளேட்.. 9ம் எண் மேல் மோகம்? – இமாச்சல பிரதேசத்தில் ஆச்சர்யம்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:10 IST)
இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ஸ்கூட்டிக்கு ரூ.1 கோடி செலவு செய்து ஒருவர் நம்பர் ப்ளேட் பெற்ற விவகாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

நாடுதோறும் இருசக்கர வாகனங்களை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு நம்பர் ப்ளேட் வாங்குவதில் பெரும் போராட்டமே நடக்கிறது. பலரும் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்கள் பிறந்தநாள், வருடம் கொண்ட எண் என விதவிதமாக எண்களை பெற முயல்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது ஒரே எண்ணை இலக்கங்களாக கொண்ட எண்களை பெறவும் போட்டி நடக்கிறது. இவ்வாறு பலரும் ஒரே எண்ணை கேட்கும் பட்சத்தில் அதை ஏலத்தில் விட்டு உச்ச தொகைக்கு கேட்பவருக்கு வழங்கப்படுகிறது.

இமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு 9ம் எண் இலக்கமாக வரும் நம்பர் ப்ளேட்டை வாங்க முயன்றுள்ளார். பலரும் HP – 99 – 9999 என்ற அந்த எண்ணை கேட்டு வந்த நிலையில் ஆரம்ப விலை ரூ.1000 என அந்த எண் ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் ரூ.1 கோடி ரூபாய் செலவு செய்து அந்த நம்பரை வாங்கியுள்ளார் ஸ்கூட்டி உரிமையாளர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments