Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக கனமழை பெய்யும்: கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 16 மே 2024 (17:46 IST)
கேரளாவில் வரும் 18ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென வானிலை மாறி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதும் சில இடங்களில் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். 
 
அதுமட்டுமின்றி நெல்லையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி கேரளாவில் மே 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
மேலும் மே 20 ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments